layer-slider-1
layer-slider-2

Om Gan Ganpate
Namo Namah

layer-slider-3

DAILY OPENING HOURS

Morning
Morning 09.00am - 02.00pm

Evening
05.00pm - 09.30pm

icon-deepam

ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் (ஹறோ)

ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான அடியார்களுக்கு அன்பான அறிவுறுத்தல்கள்

தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக அடியார்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகைதரும் பொழுது, பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென பிரித்தானிய சுகாதாரத்துறை பணித்துள்ளது:

1 உங்களுக்கு ஏதேனும் புதிய தொடர்ச்சியான இருமல், அதிகப்படியான காய்ச்சல், உணவின் சுவை, மணம் போன்றவற்றை உணராதிருந்தால் தயவுசெய்து ஆலயத்திற்கு வரவேண்டாம்.
2 பிரித்தானிய சுகாதாரத்துறை அறிவுறுத்தலுக்கமைய தற்பொழுது உள்ள சூழ்நிலை மாறும் வரை 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படி எமது ஆலய நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. தற்பொழுது உள்ள சூழ்நிலை மாறியதும் வழமைபோல் சகல அடியார்களும் பூஜை, அர்ச்சனைகளில் பங்குபற்றலாம்.
3 அடியார்கள், அடையாளமிடப்பட்ட முன் கதவால் நுழைந்து மற்றக் கதவால் வெளியேறும்படி தயவுடன் வேண்டிக் கொள்கிறோம்.
4 நீங்கள் ஆலயத்திற்கு வரும்பொழுது முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. முகக்கவசம் வாங்கமுடியாதவர்கள் £1.00 செலுத்தி ஆலயத்தில் முகக்கவசத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
5 ஆலயத்திற்கு வெளியே வரிசையில் நிற்கும் பொழுது நிற்க முடியாதவர்கள் வெளியே உள்ள கதிரையில் உட்கார்ந்து தமக்குரிய முறை வந்ததும் உள்ளே வரலாம். ஆலயத் திற்கு உள்ளே கதிரைகளில் உட்கார முடியாது.
6 ஆலயத்திற்குள் நுழைந்தவுடனும், ஆலயத்தை விட்டு வெளியேறும் பொழுதும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கிருமிநாசினியை அல்லது சவர்க்காரத்தைப் பயன்படுத்தி 20 விநாடிகள் உங்கள் கைகளைச் சுத்தம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
7 ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் அர்ச்சனைச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு அதன் பின் பக்கத்தில் உங்களுடைய பெயர், நட்சத்திரங்களை எழுதவும். சமூக இடைவெளியைப் பாதுகாப்பதற்காக அடையாளமிடப்பட்ட பகுதிக்குள் நின்று தரிசனம் செய்துகொள்ளலாம்.
8 ரிக்கற் கவுண்டரில் அடையாளமிடப்பட்ட பெட்டிக்குள் இருக்கும் பேனாவைப்; பாவித்த பின்னர் மற்ற அடையாளமிடப்பட்ட பெட்டிக்குள் பாவித்த பேனாவை வைக்கவும்.
9 உங்கள் பெயர், நட்சத்திரங்களை குருமாருக்குக் கூறாமல், குருமாருக்கும் உங்களுக்கும் 6 அடி தூரத்தில் நின்று உங்களுடைய அர்ச்சனைத் துண்டுகளை மேசையில் வைக்கலாம். பூஜை முடிந்த பின்னர் அர்ச்சனை நடைபெறும். குருமார் விபூதி, தீர்த்தம்;, பூக்கள் தரமாட்டார். குருமார் மேசையில் வைக்கும் விபூதியை நீங்கள் எடுத்துச் செல்லலாம்.
10 நீங்கள் ஆலயத்திற்கு வரும் பொழுது பாலோ, பழங்களோ அல்லது ஏதாவது பிரசாதமோ கொண்டுவர முடியாது. அதே மாதிரி குருமார் உங்களுக்கு வி©தியோ, தீர்த்தமோ, பிரசாதமாக பழங்களோ அல்லது சுவாமிகளுக்குப் படைத்த பிரசாதமோ வழங்கமாட்டார். பதிலாக விபூதியை பைக்கற்றில் வைத்து வழங்குவார். நீங்கள் பூக்கள் கொண்டு வரலாம். அவற்றை முன் கதவிற்கு பக்கத்தில் இருக்கும் கூடையில் இட்டு, உங்களுடைய பைகளை உங்களுடன் வைத்துக் கொள்ளவும், அல்லது குப்பைத்தொட்டியிலும் போடலாம்.
11 ஆலயத்திற்கு வெளியே வரிசையில் நிற்கும் பொழுதும், உள்ளே தரிசனம் செய்யும் பொழுதும் ஒருவருக்கொருவர் சத்தமாகப் பேசக்கூடாது. ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளி எப்பொழுதும் பாதுகாக்கப்பட வேண்டும்.
12 தற்பொழுதுள்ள சூழ்நிலை, சாதாரண நிலைக்கு வரும்வரை ஆலயத்திலுள்ள கதவு,கைப்பிடி, யன்னல் மற்றும் புத்தகங்களைத் தொட வேண்டாமென வேண்டுகின்றோம்.
13 தற்பொழுதுள்ள சூழ்நிலை சாதாரண நிலைக்கு வரும்வரை ஒவ்வொரு அடியாருக்கும் 15 நிமிடமே ஆலயத்தில் தரிசனம் செய்ய அனுமதித்துள்ளோம்.
14 தற்பொழுதுள்ள சூழ்நிலை சாதாரண நிலைக்கு வரும்வரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடையாளமிடப்பட்ட பகுதிக்குள் ஒன்றாக நின்று தரிசனம் செய்யலாம்.
15 தற்பொழுதுள்ள சூழ்நிலை சாதாரண நிலைக்கு வரும்வரை ஆலயத்தில் பிரசாதம் வழங்கப்படமாட்டாது. 
16 ஆலயத்திற்குகு வெளியேயும், உள்ளேயும் அமைதி காத்து, அயலவர்களுக்கு இடையூறு செய்யாதிருக்கும்படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
17 தற்பொழுதுள்ள சூழ்நிலை சாதாரண நிலைக்கு வரும் வரை நீங்கள், பூக்கள் கொண்டு வரும் பைகள், கை துடைத்த ரிசியு பேப்பர்கள், தண்ணிர் குடித்த பிளாஸ்ரிக் கப் போன்றவற்றை குப்பைத் தொட்டியில் மாத்திரம் போடவும். நாங்கள் குப்பைகளை அகற்றும் வேலை செய்வதை தவிர்க்குமா தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

இந்த நடவடிக்கைகள் யாவும் உங்களையும், மற்றைய அடியார்களையும் பாதுகாப்பதற்காகவே. ஆகவே, தயவுசெய்து சகல அடியார்களும் இவற்றைப் பின்பற்றுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

இறைபணியில்,
அறங்காவலர்கள், குருமார், தொண்டர்கள், ஸ்ரீ.சி.வி.தே.




+

Upcoming Special Day

Check out all up coming special days at our temple!


ALL SPECIAL DAYS


Shrines In The Temple



Charity Projects in the Homeland


Our temple undertakes the following projects:

In the homeland, those who have suffered as a result of the Tsunami are given aid via the Tamil Rehabilitation Organisation.  Women impacted by the Civil War are given sewing machines amongst other necessities. People effected by the floods given aide via the Saiva British Organisation. Orphans who have lost their parents as a result of the Civil War (24 female students and 6 male students) for the past three years have been housed under Yaal/ Kanagathiram Mathya Maha Vithyaalayam (Stanley college). Moreover, we have been funding the supplies for all the necessary items they require to study and live.

The committee have decided that until the students finish their higher education to the standard of A Levels the temple would continuously support them.

To support these students, we have been sending them £780 every month.

For the students living in the housing it is necessary that they participate in extra curriculum and sports activities. To help the students take part we have sent extra money for sports equipment’s amongst other things.

In 2016, for the 30 students living in the housing, the committee sent over £2000 to buy new clothes and mosquito nets on Tamil New Years.

Moreover, we have decided on funding 20/30 children who have lost their parents as a result of the Civil War.

With the co-operation of the devotees we hope to undertake more projects like this for the needs of our people back home.

“Peoples work is God’s work”

Kind Regards,

Temple Board of Trustees

மக்கள் சேவையே மகேசன் சேவை.

CONTINUE READING


+

Latest from our article section